×

பெரம்பலூரில் 21ம்தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

 

பெரம்பலூர், ஜூன் 7: பெரம்பலூரில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது என்று மாவட்டக் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக, சம்மந்தப் பட்ட துறைகள் ஒருங்கி ணைந்து சிறப்பு முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தமுகாமில் அடை யாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத் தம் செய்தல், வாக்காளர் அடையாள அட்டை பெற்று வழங்குதல், முதலமைச்ச ரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க ப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவ லக வளாகத்தில் வருகிற 21ம் தேதி அன்று திருநங்கையருக்காக நடைபெ றும் சிறப்பு முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங் கையரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூரில் 21ம்தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Karpagam ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட தாலுகாக்களில்...