விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உலக சுகாதார தினம் கொண்டாட்டம்

சேலம், ஏப்.9: விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்று பேசினார். விம்ஸ் மருத்துமனையின் துணை மருத்துவ கண்காணிப்பாளர மற்றும் பொது மருத்துவ ஆலோசகர் டாக்டர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இன்றைய சூழலில் உடல் ஆரோக்கியத்தை பேணுவதின் முக்கியத்துவம் பற்றியும், கொரேனாா தடுப்பூசி போடுவதின் அவசியம் குறித்தும் விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கெண்டனர். ஏற்பாடுகளை துறையின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தனசேகர் மற்றும் வர்ஷினி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories:

>