×

தேசிய பெண் குழந்தைகள் தினம்

 

சேலம், ஜன.26: தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பாலின உணர்திறன் அமைப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. அமைப்பின் தலைவர் பேராசிரியை தமிழ் சுடர் வரவேற்றார். டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் கனிமொழி சோமு எம்பி பங்கேற்று, பெண் குழந்தைகள் மேம்பாட்டு திட்டங்கள், கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

கௌரவ விருந்தினர் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சுதீர் வாழ்த்துரை வழங்கினார். கல்வி மற்றும் இதர பிரிவுகளில் சிறப்பாக விளங்கும் மாணவிகளுக்கு ‘அன்னபூரணி கல்வி உதவித்தொகை’ வழங்கப்பட்டது. பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், விழிப்புணர்வு சார்ந்த குறும்படம் திரையிடப்பட்டது. உதவி பேராசிரியர் அஜித்குமார் நன்றி கூறினார்.

The post தேசிய பெண் குழந்தைகள் தினம் appeared first on Dinakaran.

Tags : National Girl Child Day ,Salem ,Department of Allied Health Sciences ,Wims Hospital Campus ,Vinayaka Mission ,Tamil Sudar ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...