×

திருவிழாக்கள் இல்லாததால் குண்டுமல்லி விலை சரிவு;கிலோ ₹300க்கு விற்பனை

சேலம், ஏப்.9: திருவிழாக்கள், முகூர்த்தங்கள் இல்லாததால் குண்டுமல்லியின் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக, கிலோ ₹300ஆக சரிந்துள்ளது.சேலம் மாவட்டத்தில் குண்டுமல்லி, ஊசிமல்லி, அரளி, சம்பங்கி, சாமந்தி, கனகாம்பரம், காக்கட்டான் உள்பட பலவகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் பறிக்கப்படும் பூக்கள் சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட்டுக்கும், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பூ மார்க்கெட்டுக்கும் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். கடந்த மாதம் முகூர்த்தங்கள், கோயில் திருவிழாக்கள் இருந்ததால் ஒரு கிலோ குண்டுமல்லி ₹1500 முதல் ₹2 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது திருவிழாக்கள், முகூர்த்தங்கள் இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது. இதனால் அனைத்து வகை பூக்களின் விலையும் குறைந்துள்ளது. குண்டுமல்லி ₹300, அரளி கிலோ ₹100, வெள்ளை அரளி ₹120, மஞ்சள் அரளி ₹120, செவ்வரளி ₹140, நந்தியாவட்டம் ₹50, சம்மங்கி ₹40, சாமந்தி ₹70, சன்னமல்லி ₹300, காக்கட்டான் ₹200 என விற்பனை செய்யப்பட்டது.

Tags : Kundumalli ,
× RELATED போச்சம்பள்ளி பகுதியில் குண்டுமல்லி அறுவடை பாதிப்பு: விவசாயிகள் கண்ணீர்