×

படப்பிடிப்பில் நடனமாடிய போது நடிகை ராஷ்மிகாவுக்கு இடுப்பு தசைநார் விலகல்: 6 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை

ஐதராபாத்: படப்பிடிப்பில் நடந்த நடன காட்சியின் போது நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா ‘ரணபாலி’ மற்றும் ‘மைசா’ ஆகிய திரைப்படங்களுக்கான சண்டை மற்றும் நடன காட்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஒரு ஷெட்டில் திரைப்பட படப்பிடிப்பின் போது கடுமையான நடன காட்சியில் நடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது இடுப்பு தசைநார் முற்றிலும் விலகி பலத்த காயம் நடந்தது.

வழக்கமாக விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே அரிதாக நடக்கும் இத்தகைய கடுமையான தசைநார் விலகல் காயம், நடிகைக்கு ஏற்பட்டிருப்பது மருத்துவ வல்லுநர்களையே பெரும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட தசைநார் பூரணமாக குணமடைய அவருக்கு 6 வாரங்கள் கட்டாய ஓய்வு மற்றும் கண்காணிப்புடன் கூடிய மறுவாழ்வு சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவரது அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்த பிறகு, ரவீந்திர புல்லே இயக்கத்தில் ‘மைசா’ என்ற உணர்ச்சிப்பூர்வமான ஆக்ஷன் திரில்லர் படத்தின் படப்பிடிப்பில் ராஷ்மிகா மீண்டும் பங்கேற்று வந்தார். கோண்ட் பழங்குடியின பெண்ணாக முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Rashmika ,Hyderabad ,Rashmika Mandana ,
× RELATED கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பாவில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு