ஓசூர் வனப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் ஒற்றை யானைகள்

ஓசூர், மார்ச் 15: ஓசூர் சானமாவு வனப்பகுதியில், 3 யானைகள் தனித்தனியாக பிரிந்து சுற்றி வருவதால் விவசாயிகள், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில், 3 யானைகள் முகாமிட்டு தனித்தனியாக பிரிந்து சுற்றி வருகின்றன. இவை ராமாபுரம், அம்பலட்டி, கோபசந்திரம், பீர்ஜேபள்ளி, சானமாவு உள்ளிட்ட கிராம பகுதிகளில், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. உணவு தேடி இரவு நேரங்களில் கிராம பகுதிகளுக்கு வரும் யானைகள், பகல் நேரங்களில் வனப்பகுதிக்கு செல்லாமல் கிராமப் பகுதிகளில் சுற்றி வருகின்றன. தற்போது, இந்த யானைகள் ஓசூர்-ராயக்கோட்டை நெடுஞ்சாலையிலும், கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள பேரண்டபள்ளி வனப்பகுதியிலும் அடிக்கடி சாலையை கடந்து வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகளும், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராம மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>