×

குள்ளம்பட்டி ஊராட்சியில் பாராக மாறிய கிராம சேவை மையம்


போச்சம்பள்ளி, மார்ச் 10: குள்ளம்பட்டி ஊராட்சியில் ₹14.50 லட்சத்தில் கட்டப்பட்ட கிராம சேவை மையத்தை திறக்காததால், சமூக விரோதிகள் இரவில் கூடி, மது அருந்தும் பாராக பயன்படுத்தி வருகின்றனர். பர்கூர் ஊராட்சி ஒன்றியம் குள்ளம்பட்டி ஊராட்சி சந்தம்பட்டியில்,  தேசிய  ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கடந்த 2014-15ம் ஆண்டில் ₹14.50 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி சேவை மையம் கட்டப்பட்டது. ஆனால் 5 ஆணடுகள் முடிந்த நிலையில், இன்று வரை சேவை மையம் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் ஆக்கிரமித்து மது குடிப்பதும், காலி பாட்டில்களை உடைத்து வீசிச்செல்வதுமாக உள்ளனர். இரவு நேரத்தில் அவ்வழியாக மக்கள் செல்லவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த கிராம ஊராட்சி சேவை மையத்தை பயன்பாட்டுக்கு திறக்கக்கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Grama Niladhari Center ,Kullampatti ,
× RELATED குள்ளம்பட்டி முத்தாலம்மன் கோயில் உண்டியலை உடைத்து ரூ.75 ஆயிரம் கொள்ளை