×

குள்ளம்பட்டி முத்தாலம்மன் கோயில் உண்டியலை உடைத்து ரூ.75 ஆயிரம் கொள்ளை

தோகைமலை: தோகைமலை அருகே கொசூர் ஊராட்சி குள்ளம்பட்டி முத்தாலம்மன் கோயில் உண்டியல்களை உடைத்து மர்ம நபர்கள் ரூ.75 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கொசூர் ஊராட்சி குள்ளம்பட்டியில் பிரசிதிபெற்ற முத்தாலம்மன் கோயில் அமைந்து உள்ளது. இந்த கோயிலில் பவுணர்மி, அமாவாசை மற்றும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை போன்ற முக்கிய தினங்களில் பக்தர்கள் வழிபட்டு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களால் திருவிழாவும் நடத்தி வருகின்றனர். இந்த கோயிலின் கருவறைக்கு முன்பாக பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் கோயில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் முத்தாலம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் முன் மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் குள்ளம்பட்டி முத்தாலம்மன் கோயில் முன்பாக உள்ள கேட்டு திறந்து கிடந்து உள்ளது.

இதனால் அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்து உள்ளனர். அப்போது கோயில் முன் மண்டபத்தில் அமைக்கப்பட்டு இருந்த உண்டியல் மாயமாகி இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து குள்ளம்பட்டி ஊர் பொதுமக்கள் அப்பகுதி முக்கியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளனர். இதை அறிந்த ஊர் முக்கியஸ்தர்கள் தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், அங்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள கோயில் கேட்டை உடைத்து கோயிலுக்குள் நுழைந்து உண்டியலை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர் என்று ஆய்வு செய்தனர். பின்னர் சுமார் 1 கி.மீ தூரத்தில் உண்டியல் கடைக்கப்பட்டு இருந்ததை போலீசார் உறுதி செய்தனர். அப்போது முத்தாலம்மன் கோயில் உண்டிலை உடைத்து அதில் இருந்த சுமார் 75 ஆயிரம் உண்டியல் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றதாக முக்கியஸ்தர்கள் போலீசாரிடம் தெரிவித்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் தோகைமலை போலீசார் குள்ளம்பட்டி முத்தாலம்மன் கோயில் உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kullampatti Muthalamman ,Temple ,
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்