×

சட்டமன்ற தொகுதிகளில் 24 குழுக்கள் தீவிர கண்காணிப்பு

சிவகங்கை, ஏப்.10: சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தற்போது மாவட்டத்தில் மொத்தம் 11லட்சத்து 10ஆயிரத்து 599 வாக்காளர்கள் உள்ளனர். ஆயிரத்து 518 வாக்குச்சாவடிகள் உள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் வாகன சோதனை, பறக்கும்படையினர் சோதனை உள்ளிட்டவைகள் நடந்து வருகின்றன. ரூ.50ஆயிரத்திற்கு கூடுதலாக கொண்டு செல்பவர்கள் கட்டாயம் அதற்கான ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 12 பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு என 24 குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. தாசில்தார் தலைமையில் ஒரு எஸ்ஐ, இரண்டு போலீசார், ஒரு வீடியோ கிராபர் பறக்கும் படையில் பணிபுரிகின்றனர்.

சுழற்சி முறையில் எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பறக்கும் படை குழு 24மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் தீவிர வாகன பரிசோதனை நடந்து வருகிறது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் 24மணி நேரமும் செயல்படு வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 1950 மற்றும் 18004257036 கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தேர்தல் தொடர்பான புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags : Sivaganga ,Sivaganga district ,Karaikudi ,Tirupattur ,Manamadurai ,
× RELATED வாக்குச்சாவடியில் இருந்து 200...