×

வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

தேனி, ஏப். 10: பெரியகுளம் அருகே உள்ள பகுதியை நவநீதகிருஷ்ணன் (21). இவர், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த 31 வயது இளம்பெண்ணை, அவரது கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இளம்பெண் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வர, வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப்பதிந்து நவநீதகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி அனுராதா முன்னிலையில் நடந்து வந்தது. அரசுத் தரப்பில் வக்கீல் குருவராஜ் ஆஜரானார்.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், ‘இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நவநீதகிருஷ்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை, ரூ.6 ஆயிரம் அபராதம், செலுத்த தவறினால் மேலும் 28 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

 

Tags : Theni ,Navaneethakrishnan ,Periyakulam ,
× RELATED வாக்குச்சாவடியில் இருந்து 200...