×

பர்னிச்சர் கடையில் பணம் திருடிய வாலிபர் கைது

பல்லடம், ஏப்.10: காங்கயம், நிழலி எல்லப்பாளையம் புதூரை சேர்ந்தவர் கார்த்தி (37). கொடுவாயில் பர்னிச்சர் கடை வைத்துள்ளார்.கடந்த மாதம் 26ம் தேதி அவர் காங்கயம் சென்றுவிட்டார்.அவரது மனைவி சவிதா கடையில் இருந்தார். அப்போது தலையணை கேட்டு வந்த ஒருவர் சவிதாவின் கவனத்தை திசை திருப்பி கடையிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுவிட்டார்.

அவிநாசிபாளையம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது பணத்தை திருடியது மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பாபுராஜ் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags : Palladam ,Karthi ,Puthur ,Kangayam ,Niyasali Ellapalayam ,Koduvai ,Savita ,
× RELATED காங்கயம் நீதிமன்றத்தில் சமரச நாள் விழிப்புணர்வு முகாம்