×

ஈரானும் அமெரிக்காவும் சண்டை நிறுத்தம் அறிவித்ததை அடுத்து பங்குச் சந்தை குறியீட்டு எண் 3.95% அதிகரித்தது!!

மும்பை: ஈரானும் அமெரிக்காவும் சண்டை நிறுத்தம் அறிவித்ததை அடுத்து பங்குச் சந்தை குறியீட்டு எண் 3.95% அதிகரித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,946 புள்ளிகள் அதிகரித்து 77,563 புள்ளிகளானது. இண்டிகோ பங்கு 8%, எல்&டி பங்கு 7.6%, பஜாஜ் பைனான்ஸ் பங்கு 7%, எம்&எம் பங்கு 6.8% விலை உயர்ந்தன. வர்த்தக நேரம் முடியும் முன் 3,019 புள்ளிகள் அதிகரித்து 77,635 புள்ளிகள் தொட்ட சென்செக்ஸ், இறுதியில் 2,946 புள்ளிகள் உயர்ந்தன. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 874 புள்ளிகள் அதிகரித்து 23,997 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

Tags : Iran ,United States ,Mumbai ,Bombay Stock ,Indigo ,
× RELATED 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு...