×

தங்கம் விலையில் அதிரடி மாற்றம்; பவுனுக்கு ரூ.1040 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.1040 குறைந்தது. தங்கம் விலை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாரத்தின் தொடக்க நாளான நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,810க்கும், பவுனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 10,480க்கும் விற்பனையானது. மாலையில் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,990க்கும், பவுனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,920க்கும் விற்பனையானது.

இந்நிலையில் நேற்றும் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,860க்கும், பவுனுக்கு ரூ.1,040 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 10,880க்கும் விற்றது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.255க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, பார் வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனையானது.

Tags : Chennai ,
× RELATED ஈரானும் அமெரிக்காவும் சண்டை...