×

பியூஸ் கோயல் வியாபாரி சீமான் ஒரு யூடியூபர்: நிர்மல்குமார் அட்டாக்

தவெக சார்பில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச் செயலாளர், நிர்மல்குமார் நேற்றிரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஜயின் சுற்றுப்பயண திட்டம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இன்று காலை திருநெல்வேலியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் பிரசாரத்தில் இருந்துள்ளார். கும்பகோணம் வேட்பாளரும் பிரசாரத்தில் இருந்துள்ளார். ஆனால், வதந்தியை பரப்புகிறார்கள். வேட்பாளர் மாற்றம் என்பது அனைத்து கட்சிகளிலும் நடைமுறையில் உள்ளது.

விஜய்யின் பிரசார வேன் பின்னால் வரும் தொண்டர்களை நாங்கள் தடை செய்ய முடியாது. வரும் தேர்தலில் அதிமுக 10 தொகுதி ஜெயித்தாலே பெரிய விசயம். எல்லா இடங்களிலும் மூன்றாவது இடத்திற்கு தான் அதிமுக வரும். அதிமுக, பாஜவுடன் நேரடியாக அடிமையாக உள்ளது. பியூஸ் கோயலுக்கு தமிழ்நாட்டை பற்றி என்ன தெரியும்? மகாராஷ்டிரா முதல்வருடன் தமிழ்நாட்டில் பாஜ வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிறார்.

தமிழ்நாட்டிற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் தமிழ்நாட்டில் அரசியல் செய்வது என்ன என்று புரியவில்லை. பியூஸ் கோயல் வட இந்தியாவில் வியாபாரியாக இருப்பார். தமிழ்நாட்டைப் பற்றி பேச எந்த அருகதையும் அவருக்கு இல்லை. சீமானுக்கு வெறும் இரண்டு சதவீத வாக்குகள் மட்டுமே உள்ளது. அவருக்கு எப்போதுமே இரண்டு சதவீத வாக்குகள் மட்டும் தான். கடந்த முறை தவெகவினர் வாக்களித்ததால் தான் அவருக்கு 8 சதவீதம் வந்தது. இது அவருக்கே தெரியும். நான் ஜெயிக்க மாட்டேன் எனக் கூறி யூடியூபர் மாதிரி செயல்படுகிறார். இவ்வாறு கூறினார்.

Tags : Goyal ,Seaman ,Nirmal Kumar ,Akkad ,Madurai Thiruparangundaram ,Dweka ,Vijay ,Tirunelveli ,Edappadi ,Kumbakonam ,
× RELATED கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்...