×

காவல் நிலையம் எதிரே தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி

தாரமங்கலம், ஏப்.7:தாரமங்கலம் அருகே உள்ள சிக்கம்பட்டி கிராமம், மிளகாய்காரனூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(36), கூலி தொழிலாளி. இவரது அண்ணன் ஐயப்பன் (40). இவர்களது பூர்வீக நில பத்திரத்தை வேறு நபரிடம் அடமானம் வைத்து விட்டு, மீட்காமல் சாக்குப் போக்கு சொல்லி வந்தார். இது தொடர்பாக, இருவருக்கும் கடந்த சில நாட்களாக வாக்குவாதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், காவல் நிலையத்தில் சேகர் புகாரளித்தார். இது தொடர்பாக விசாரிக்க இருதரப்பையும் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்தனர். நேற்று மாலை, காவல் நிலையத்திற்கு வந்த ஐயப்பன் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த போலீசார், அவரை தடுத்து அவர் மீது தண்ணீர் ஊற்றி சமரசம் செய்தனர். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக, ஐயப்பன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Taramangalam ,Sekar ,Chikkapatti ,Milakaikaranur ,Ayyappan ,
× RELATED 16 வயது சிறுமியை கடத்தி திருமணம்