- காவிரி நதி
- மிட்ஃபீல்ட்
- காவிரியாற்றங்கரையிளுள்ளதோர்
- தேவூர் புலியம்பட்டி பரிசு துறை
- இடிப்பாடி, சேலம் மாவட்டம்
இடைப்பாடி, ஏப். 3: சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே தேவூர் புளியம்பட்டி பரிசல் துறை காவிரி ஆற்றில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு வடமாநில வாலிபர்களின் சடலம் தண்ணீரில் மிதப்பதாக, அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், புல்லாகவுண்டம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அருள்முருகன், தேவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தேவூர் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் காவிரி ஆற்றில் தண்ணீரில் மிதந்த சடலங்களை, தீயணைப்பு துறையினர் மூலம் மீட்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், தண்ணீரில் இறந்து கிடந்தது வடமாநிலத்தை சேர்ந்த நபர்கள் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ேபாலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
