×

ஓய்வு அரசு ஊழியரை தாக்கிய மகன் கைது

ேசலம், ஏப்.7: சேலம் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(77). ஏடிசி டெப்போவில் மெக்கானிக்காக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் பென்சன் வருகிறது. இவரது இளையமகன் சேட்டு(எ)தீனதயாளன்(47), அடிக்கடி போதையில் வந்து பணம் கேட்டு தகராறு செய்ததுடன் அவரை அடித்து ஏடிஎம் கார்டை எடுத்துச்சென்றுவிட்டார். நேற்றும் சுப்பிரமணியை மகன் தீனதயாளன் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த கிச்சிப்பாளையம் போலீசார், சேட்டு(எ) தீனதயாளனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Salem ,Subramani ,Kasthuribai Street, Kichipalayam, Salem ,ATC ,Settu (a) Deenadayalan ,
× RELATED 16 வயது சிறுமியை கடத்தி திருமணம்