×

16 வயது சிறுமியை கடத்தி திருமணம்

சங்ககிரி, ஏப்.7: இடைப்பாடி அருகே 16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இடைப்பாடி தாலுகாவைச் சேர்ந்தவர் பசுபதிராஜா (28), கட்டிடத் தொழிலாளி. இவர் கடந்த மாதம் 28ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். அதற்கு சிறுமியின் பெற்றோர் இன்னும் 18 வயது முடியவில்லை. இரண்டு வருடமாகட்டும் என்று கூறி அனுப்பி உள்ளனர். இதையடுத்து, பசுபதிராஜா சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி சிறுமியிடம் பசுபதி ராஜா நாம் இருவர் திருமணம் செய்து கொண்டால், யாராலும் நம்மை பிரிக்க முடியாது எனக்கூறி, முனியப்பன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து சிறுமியின் தாய், நேற்று சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், மகளை கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பசுபதி ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்தார். புகாரின் பேரில், போலீசார் பசுபதி ராஜா மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Sangakiri ,Boxo ,Pasupatriraja ,Idipadi ,Taluka ,
× RELATED மேட்டூர் அரசு மருத்துவமனையில்...