×

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு

சேலம், ஏப்.6: அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (29). இவர் வசித்து வரும் வீட்டில் புதிய குளிர்சாதன பெட்டியை பொருத்துவதற்காக, நேற்று மதியம் மேட்டுப்பட்டியை தாதனூரைச் சேர்ந்த சதீஸ்குமார் (34), ஜெயபிரகாஷ் இருவரும் சேர்ந்து குளிர்சாதன பெட்டியை பொருத்தி, ஒயர்களை சரி பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக சதீஸ்குமார் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் மயங்கி விழுந்துள்ளார். ஜெயபிரகாஷ், அவரை மீட்டு அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது, சதீஸ்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

Tags : Salem ,Kannan ,Ayodhyapatnam ,Satishkumar ,Jayaprakash ,Dadanur, Mettupatti ,
× RELATED ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா