×

கட்டணமின்றி சிறுமிக்கு நடந்த ரூ.25 லட்சம் மதிப்பு சிகிச்சை: முதல்வர் பாராட்டு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: சிறுநீர்க் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக 25 லட்ச ரூபாய் சிகிச்சையை அளித்துள்ள நம் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை குழுவினரைப் பாராட்டுகிறேன். இத்தகைய சாதனைகள் தொடர, அமையவுள்ள திராவிட மாடல் 2.O ஆட்சியில், மருத்துவக் காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்வு, சென்னை, காஞ்சிபுரம் போன்று, பிற வட்டாரங்களிலும் அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை ‘ஸ்டாலின் ஸ்டேட்மென்ட்’ என வழங்கியிருக்கிறேன். நலமான தமிழ்நாடு 2030க்கு வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Mu. K. Stalin ,Rajiv Gandhi Government General Hospital ,South India ,
× RELATED வெளிநாட்டு நிதி பங்களிப்பு...