×

தவெகவினர் இன்ஸ்டா தவளைகள்; வெயிலில் பித்து பிடித்தது போல பேசும் விஜய்: நிர்மல்குமாருக்கு ராஜேந்திரபாலாஜி பொளேர்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:  பைத்தியம் பிடித்து பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடியுமா? யார் யாரெல்லாமோ அழிக்க முயற்சித்தும் அழிக்க முடியாத அதிமுகவை விஜய் வந்து அழித்துவிட முடியுமா? அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில இணைச் செயலாளராக இருந்த நிர்மல்குமார் தவெகவில் ஏதாவது கிடைக்குமா என்று நினைத்து சென்றுள்ளார். தவெகவில் நிர்மல்குமாருக்கு எதுமே கிடைக்காது. கொய்யாப்பழம் கூட கிடைக்காது. தவெகவிற்கு செல்லும் எல்லோருக்கும் எதுவுமே கிடைக்காது.

சென்றவர்களெல்லாம் மீண்டும் அவரவர் இருந்த இடத்திற்கே வருவார்கள். நிர்மல் குமார் எவ்வளவு வேகமாக மீண்டும் அதிமுகவிற்கு வருவார் என்று பாருங்கள். நிர்மல்குமார் எனது நண்பர்தான். அவர் அங்கு இருப்பதால் அப்படி பேசி வருகிறார். நிர்மல்குமார் டெபாசிட் கூட வாங்க முடியாது. தவெக வேட்பாளர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராமில்தான் அரசியல் செய்கிறார்கள். மக்களை சந்திக்கும் திறமையும், தகுதியும் அவர்கள் யாருக்கும் கிடையாது.

தவெகவில் இணைந்துள்ள ஒரு சில அரசியல் அனுபவம் வாய்ந்த வேட்பாளர்கள் மட்டும் மரியாதையான வாக்குகள் வாங்குவார்கள். மற்றபடி 98% வேட்பாளர்கள் மிக மிக பின்தங்கிய நிலைக்கு செல்வார்கள். திமுகவுக்கும் தவெகவுக்கும் போட்டி என விஜய் சொல்வதை, பங்குனி சித்திரை வெயிலால் பித்து பிடித்து போய் பேசுவதாக மக்கள் சொல்கிறார்கள். போட்டி என்றால் அது அதிமுகவிற்கும் திமுகவிற்கும் மட்டுமே. களத்தில் வேறு யாருக்கும் வேலையே கிடையாது.

வாக்குப்பதிவு மையத்தில் வாக்குப்பதிவு தினத்தன்று 11 மணிக்கு மேல் தவெகவில் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். இன்ஸ்டாகிராமிலும் பேஸ்புக்கிலும் அரசியல் செய்து கொண்டு நாங்கள்தான் நாங்கள்தான் என தவளை போல் கத்தினால் ஒன்றும் ஆகாது. வீணா போன கட்சியிலிருந்து சீட்டு வாங்கியவர்கள் வீணா போக போகிறார்கள். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Davekavinar ,Vijay ,Rajendrabalaji Poller ,Nirmal Kumar ,Virudhunagar district ,Sivakasi ,minister ,Rajendrabalaji ,ARCHIPELAGO ,
× RELATED கட்டணமின்றி சிறுமிக்கு நடந்த ரூ.25...