×

காரமடை அருகே சிறுத்தை நடமாட்டம்

காரமடை, ஏப்.2: காரமடையை அடுத்துள்ள ஒன்னிப்பாளையம் பகுதியில் உள்ள கரட்டில் கடந்த சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று அதன் காலடித்தடங்களை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து, அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி அதன் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். ஒரே பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்த காரமடை வனத்துறையினர் ஒன்னிப்பாளையம் கரட்டு பகுதியில் கூண்டு வைத்து அதனை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ‘‘ஒன்னிப்பாளையம் கரட்டு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை பிடிபட்டவுடன் அதனை அடர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

 

Tags : Karamadai ,Karat ,Onnipalayam ,Forest Officer ,Joseph Stalin ,
× RELATED மகாவீர் ஜெயந்தி தினத்தில் பதுக்கி வைத்து மது விற்ற 6 பேர் கைது