×

தந்தைக்கே வில்லன் மக்களுக்கு நல்லவரா? அன்புமணிக்கு அமைச்சர் பதிலடி

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒரு இடத்தில் பிரசாரம், ரோடு ஷோ நடத்த வேண்டும் என்றால் அதற்கு 48 மணி நேரத்திற்கு முன் அனுமதி பெற வேண்டும். அனைத்துமே தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால் ஆணைய விதிகளை பின்பற்றுகிறவர்களுக்கு எந்தவித சிக்கலும் ஏற்படாது. விதிமீறல் செய்தால் அதற்குரிய தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும்.

திமுகவின் தேர்தல் அறிக்கையைத்தான் ஜெராக்ஸ் எடுத்து எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறாரே தவிர, அவர் புதிதாக ஒன்றையும் செய்யவில்லை. திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இல்லை. வில்லனும், காமெடியனுமாக இருக்கிறது என்று விமர்சனம் செய்யும் அன்புமணியை போன்ற ஒரு காமெடியனும், வில்லனும் உலகத்தில் இருக்க முடியாது. தந்தைக்கே வில்லனாக இருக்கக்கூடியவர் மக்களுக்கு எப்படி நல்லவராக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Anbumani ,Minister ,Raghupathi ,Pudukkottai ,Election Commission ,
× RELATED அம்பை அதிமுக வேட்பாளர் இசக்கி...