×

அரியலூரில் 2 இடங்களில் அமைச்சர் சிவசங்கர் காரில் பறக்கும்படை சோதனை

அரியலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னத்திலிருந்து அரியலூர் நோக்கி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனது காரில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது செந்துறை ரவுண்டனா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், அமைச்சர் சிவசங்கர் வந்த காரை நிறுத்தி காருக்குள்ளே தீவிர சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, வாரணவாசி அருகே அமைச்சர் சிவசங்கர் காரில் சென்ற போது அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், அமைச்சர் சிவசங்கர் காரை மறித்து காருக்குள் தீவிர சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Minister ,Sivashankar ,Ariyalur ,Transport Minister ,Kunnam, Perambalur district ,Senthurai Roundabout ,
× RELATED போதிய கூட்டமில்லை என மாவட்ட செயலாளர்...