- எடப்பாடி
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
- கடலூர்
- தேரடி தெரு, திருப்பாதிரிப்புலியூர், கடலூர்
- அமைச்சர்
- மு.R.K பன்னீர் செல்வம்
- நிலை
- சண்முகம்
- கடலூர் சட்டமன்றம்
- சந்திரசேகரன்...
கடலூர்: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு கடலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரசேகரனை ஆதரித்து பேசுகையில், ‘‘மதசார்பற்ற கூட்டணி வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பது உறுதி.
தமிழக அரசு 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சி அமைத்த பிறகு மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளும் செய்து வருகிறார். தமிழக மக்கள் பயன்பெறும் விதத்தில் பல்வேறு திட்டங்கள் செய்து கொடுத்திருக்கிறார். தொடர்ந்து மீண்டும் அவர் முதல்வரான பிறகு 100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணி குறித்து முன் வைத்து வரும் விமர்சனங்கள் அனைத்தும் வெறும் அவதூறுகள். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க தைரியம் இல்லாததால் தான், அவர் திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது தரம் தாழ்ந்த தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார். இத்தகைய பிரசாரங்களை இடதுசாரி கட்சிகள் ஒருபோதும் ஏற்காது’’ என்றார்.
