×

10 பேர் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்

சென்னை: சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் வகையில் 10 பேர் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை ராமதாஸ் வெளியிட்டார். பாமக நிறுவனர் ராமதாஸ்- அன்புமணி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் இரு தரப்பினரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அன்புமணி அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்புமணி, பாமகவை கைப்பற்றிய நிலையில், சசிகலா தலைமையிலான அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து ராமதாஸ் தலைமையிலான பாமக சட்டப் பேரவை தேர்தலை சந்திக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 234 தொகுதிகளிலும் இந்த கூட்டணி போட்டியிட முடிவு செய்துள்ளது. இதில் ராமதாஸ் தரப்பு வட மாவட்டங்களில் சுமார் 40 இடங்களிலும், சசிகலாவின் கட்சி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சுமார் 60 இடங்களிலும் கவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது. இதனிடையே நேற்று 23 பேர்கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சசிகலா வெளியிட்ட நிலையில், 5 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ராமதாசும் வெளியிட்டார். இந்த முதல் பட்டியலில், சேலம் மேற்கில் அருளும், கும்பகோணத்தில் ஸ்டாலின், விருத்தாசலத்தில் சுரேஷ், வந்தவாசி முரளி சங்கர், மயிலாடுதுறையில் சக்திவேல் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 3 வேட்பாளர்கள் அன்புமணி பாமகவை எதிர்த்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று 10 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாம் கட்ட பட்டியலை ராமதாஸ் அறிவித்தார். இந்த பட்டியலில், திருப்போரூர் தொகுதி-ஏகாம்பரம், உத்திரமேரூர் தொகுதி- ஸ்ரீதர், கும்மிடிப்பூண்டி தொகுதி- சங்கர், திருவள்ளூர் தொகுதி-வெங்கடேசன், செஞ்சி தொகுதி-கனல் பெருமாள், தர்மபுரி தொகுதி- சரவணன், ஜெயங்கொண்டம் தொகுதி- காடுவெட்டி ரவி, செய்யாறு தொகுதி- சீனிவாசன், அந்தியூர் தொகுதி-கோபால், புவனகிரி தொகுதி-பாலமுருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Ramadas ,Chennai ,Council ,Anbumani ,Bamaka ,
× RELATED சொல்லிட்டாங்க…