×

பாஜவோடு இருப்பதால் நாங்களும் இந்திவாலா தான்! உண்மையை சொன்ன எஸ்.பி.வேலுமணி; நாங்க அதான் ஜி…!

அதிமுகவின் தொண்டாமுத்தூர் வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த தேர்தலை போல இந்தமுறை எளிதாக வெற்றி பெற முடியாது என்ற அச்சம் அவரிடம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால், தனி குழு அமைத்து தொண்டாமுத்தூர் தொகுதியில் ரகசிய சர்வே ஒன்றையும் எடுத்து இருக்கிறார். இதில் அவரது தொகுதியில் குறிப்பாக, இந்தி மொழி பேசுபவர்களின் வாக்குகள் குறைந்த அளவில் பதிவாகி இருக்கிறது. இதனால் இந்தி மொழி பேசுபவர்களின் வாக்குகளை பெறவும் அவர் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார். குறிப்பாக, பாஜ தங்களின் கூட்டணியில் இருப்பதால், நாங்களும் இந்தி வாலா தான் என கூறி கொண்டு இந்தி மொழி பேசும் நபர்களிடம் சென்று வாக்கு கேட்டு வருகிறார்.

சமீபத்தில் எஸ்.பி.வேலுமணி இந்தி மொழி பேசும் நபர்களை அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர்களிடம், ‘‘நமஸ்தே ஜி.. இது நம்ம தொகுதி. நீங்க மட்டும் ஓட்டு போட கூடாது. நீங்கள், உங்களை சேர்ந்தவர்கள் எல்லாரையும் ஓட்டு போட வைக்கணும். மத்த ஏரியாவுல பார்த்தால் 70 சதவீதம், 80 சதவீதம் வாக்குகள் வந்துவிடுகிறது. உங்க பகுதியில் 50 சதவீதத்திற்கு கீழ் தான் வாக்கு வருகிறது. அதனால, இந்த முறை மற்றவர்களின் ஓட்டும் எங்களுக்கே வர வேண்டும். சில ஏரியாகளில் ஓட்டு மாறி போய்விடுகிறது. நீங்கள் மட்டுமில்லாமல் அனைவரின் ஓட்டும் எனக்கு போட வையுங்க. எங்கள் கூட்டணியில் பாஜவும் இருக்கு’’ என கூறியிருக்கிறார். எஸ்.பி.வேலுமணி தமிழில் பேசியதை அங்கிருந்த நபர் இந்தியில் மொழிபெயர்ப்பு செய்தார்.

Tags : Hinduwala ,BJP ,S.P. Velumani ,AIADMK ,Thondamuthur ,
× RELATED ஜாடிக்கேத்த மூடி, மூடிக்கேத்த ஜாடி...