×

ரூ.8000 கூப்பன் மற்ற நாடுகள் பின்பற்ற போகும் சிறப்பான திட்டம்: திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம்

1. தேர்தலின் கதாநாயகனாக திமுகவின் தேர்தல் அறிக்கை பேசப்படுகிறதே?
கடந்த தேர்தலில் மகளிர் உரிமைத் தொகை, மாதம் ஆயிரம் தருவதாக திமுக கூறியது ஆனால் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் மாதம் ரூ.1,500 தருவதாக கூறியது, சொல்கின்ற சொல்லை காட்டிலும் சொல்பவர் யார் என்று தான் மக்கள் பார்த்தார்கள், திமுகவின் வாக்குறுதி குறைவாக இருந்தாலும் திமுகவை மக்கள் நம்பினார்கள். காலை உணவு திட்டத்தை கனடா, இங்கிலாந்து ஏற்றுக் கொண்டது போல, மகளிருக்கு எந்த அடமானமும் இல்லாமல் ரூ.5 லட்சம், வாஷிங்மிஷன், குளிர்சாதன பெட்டி வாங்கிட ரூ.8000. இது எதிர்காலத்தில் மற்ற நாடுகளால் பின்பற்றும் சிறப்பான திட்டங்களாக மாறும்.

2. முதல்வர் மு.க.ஸ்டாலினை பொம்மை முதல்வர் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?
தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்றதை டி.வி பார்த்த பின் தெரிந்து கொண்டேன், பெனிக்ஸ், ஜெயராஜ் அடித்துக் கொள்ளப்பட்டால் இதய நோயால் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்கள் என சொல்கின்ற எடப்பாடிக்கு, குடியுரிமை திருத்த சட்டத்திற்கோ, வக்பு வாரியத்தில் முஸ்லீம் அல்லாதவர்களும் இருக்கலாம் என்று திருத்தம் கொண்டு வரும் போது எல்லாம் அமைதியாக இருந்த எடப்பாடி கொரோனா நேரத்தில் வார்டு, வார்டாக சென்று மருத்துவர்களை உற்சாகப்படுத்திய தளபதியை, ரூ.3,500 கோடி தராவிட்டாலும் இந்தியை ஏற்கமாட்டேன் எனச் சொல்லும் தளபதியை பொம்மை என சொல்வது ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை என்கிற கதையாக தான் இருக்கிறது.

3. விஜய்யின் மனைவி சங்கீதா அவர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளை எப்படி பார்க்கிறீர்கள்? அதேபோல் விஜய்யின் ரசிகர்கள் முட்டு கொடுக்கமுடியவில்லை, கிராமத்து பெண்களும் த்ரிஷா உடன் சென்றதை வசைபாடுகிறார்களே?
நீரடித்து நீர் விலகாது, எங்களுக்குள் பேசிக் கொள்கிறோம், என் மனைவி, மகன், மகளை நான் விட்டுவிட மாட்டேன் என்று மேடையில் சொல்லாமல் அதெல்லாம் வொர்த் இல்லாத விஷயம் என பேசுவதை படித்த தமிழ் பெண்கள் ரசிக்கவில்லை. நீதிமன்றத்தில் திருமணத்திற்கு மீறிய உறவுடன் ஒரு நடிகையுடன் சுற்றுகிறார் என்று வழக்கு போட்டால், அப்படி நான் இல்லை என்று சொல்வதற்கு பதில் ஒரே கலரில் சேலை, வேட்டி, சட்டையுடன் ஒரே காரில் செல்வதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்கிறார். மனைவி இருக்கும் போதே த்ரிஷாவுடன் தான் சுற்றுகிறேன் என சட்டத்திற்கும், பண்பாட்டிற்கும் சவால் விடுகிறாரா?. ஆண்மகன் சம்பாதிப்பதெல்லாம் மனைவி, மகன், மகள், அப்பா, அம்மாவுக்கு பங்கு உண்டு. ஆனால் அவர்களுக்கே கடன் கொடுத்திருப்பது, அதிலும் பெற்ற மகளுக்கு ரூ.4 லட்சம் கொடுத்தது எல்லாம் கடன் என்கிறாரே. படத்திற்கு ரூ.300 கோடி வாங்கியதை விட்டு விட்டு வந்தேன் என்பவர் ரூ.519.71 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக கூறுகிறார். ரூ.300 கோடி என வருமான வரித்துறை, இந்திய அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றுகிறாரா?. என பெண்களே திட்டுகிறார்கள்.

4. பாஜவில் அண்ணாமலை ஓரம் கட்டப்படுவதாக நினைக்கிறீர்களா?
தவறான வழியில் பணம் சேர்த்து அதை அடியாட்களுக்கு கொடுத்து கை தட்ட வைப்பது, சொந்த கட்சிக்காரர்களையே கேமிரா மூலம் மிரட்டுவது, 2024 தேர்தலில் 25 எம்பிக்கள், 5 அமைச்சர்களும் இருப்பார்கள் என பொய் நம்பிக்கை ஊட்டுவது, கூட்டணி கட்சித் தலைவர்களான ஜெயலலிதா, எட்ப்பாடியை தரக்குறைவாக பேசுவது, ெசாந்தக்கட்சி இல.கணேசன் போன்றோரை கேலி செய்வது என வாழ்ந்த அண்ணாமலையின் கருப்புச்சாயம் வெளுத்து போனதால் சின்ன பதவிகூட இல்லாமல் மூலையில் வைக்கப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் தமிழகத்தையே வலம் வரப் போவதாக சொன்ன அண்ணாமலை இன்று சொந்த கட்சிக்காரர்களால் முடக்கி வைக்கப்பட்டுள்ளார். உடலில் ஆறாம் விரல்கள் வளர்ச்சியை யாரும் விரும்ப மாட்டார்கள், இவர் ஆறாம் விரல்கூட அல்ல உடலில் வளரும் புற்றுநோய் இந்த நோயை ஓரம் கட்டக்கூடாது ஒரேயடியாக அகற்ற வேண்டும்.

* ஏம்பா…அவரோட பேரென்ன…? கஜினி சூர்யாவாக மாறிய திண்டுக்கல்
திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது கூறியதாவது: தேஜ கூட்டணியின் ஒரிஜினல் கதாநாயகன் எடப்பாடி பழனிசாமி. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஜோசியரை பிடித்துள்ளேன். வேட்பு மனு ரகசியமாக செய்ய முடியாது. நல்ல நாள் பார்த்து வேட்பு மனு செய்ய வேண்டும். தற்போதே நான் செய்வது பிரசாரம்தான். நான் ஊருக்கு புதியவர் அல்ல. நேரடியாக மக்களை சந்திக்க வேண்டியது தான். நம்மளோட கூட்டணி கட்சி தலைவர்களான பாமக தலைவர் டாக்டர் அன்புமணி… அப்புறம் யாரு… ஆங்… பாஜ மாநில தலைவர் நரேந்திர நயினார்… இல்ல நயினார் நாகேந்திரன்… வேற யாருப்பா? நம்ம கூட்டணில… பாட்டாளி மக்கள் கட்சியா… இல்லையே… யாரது..

(பக்கத்தில் இருப்பவர் அமமுக என்கிறார்). ஆமா… நம்ம டிடிவி அண்ணன் கட்சி அமமுக…வேற வேற யாரு.. (பாமக அண்ணே என்கிறார் ஒருவர்). அவர் பேரை சொல்லிட்டேம்பா… (தமாகா அண்ணே என்கிறார் ஒருவர்). ஆங்… நம்ம மூப்பனார் பையன் ஜி.கே.வாசனின் தமாகா கட்சி… இன்னொருத்தரு புதிய நீதிக்கட்சியை சேர்ந்த ஏசி.சண்முகம்.. வேற யாரு இருக்கா… புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தி… (அண்ணே.. பாரிவேந்தரை விட்டீங்க என்கிறார்)… ஆமா… பாரிவேந்தரின் ஜஜேகே கட்சி… இப்படியாக கூட்டணி கட்சி தலைவர்கள் இருக்காங்க… கூட்டணி கட்சியில யாராவது விடுபட்டு இருந்தால் சேர்த்துக்கோங்கப்பா… அப்புறம் வேட்பாளர் விட்டுவிட்டார் என்ன சொல்லாதீங்க’’ என தனது பாணியில் பேசி பேட்டியை முடித்து விட்டார். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக மாநில பொருளாளரே கூட்டணி கட்சி தலைவர்களின் பெயர்கள் தெரியாமல் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டு கேட்டு கூறியது அங்கிருந்த கூட்டணி கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Tags : DMK Business Team ,Kasi Muthu Manickam ,DMK ,AIADMK ,
× RELATED ஜாடிக்கேத்த மூடி, மூடிக்கேத்த ஜாடி...