×

ரயில் மீது கல்வீச்சு

 

திண்டுக்கல், மார்ச் 31: திண்டுக்கல் அருகே திருநெல்வேலி – சென்னை இடையே சென்ற வந்தே பாரத் ரெயில் பெட்டின் கண்ணாடி மீது யாரோ கல்லெறிந்து விட்டு தப்பி விட்டனர். இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் 14 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்கள் இச்சம்பவத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டது. போலீசார் விசாரணை நடத்திய போது 2 சிறுவர்களும் ரயில் மீது கல் எறிந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் 2 சிறுவர்களையும் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், ‘ஓடும் ரெயில் மீது வீசப்படும் கற்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருக்கும் பயணிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு காயங்களையும், உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 152ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்’ என்றனர்.

 

Tags : Dindigul ,Tirunelveli ,Chennai ,Railway Protection Force ,Inspector ,Bhoominathan ,
× RELATED அரியலூர், ஜெயங்கொண்டத்தில் 100 சதவீதம்...