×

பிஜூ பட்நாயக் பற்றி சர்ச்சை கருத்து பாஜ எம்பி நிஷி காந்த் துபேவுக்கு மனநல சிகிச்சை தேவை: நவீன் பட்நாயக் காட்டம்

புவனேஷ்வர்: பாஜ எம்.பி நிஷி காந்த் துபே அண்மையில் ஒடிசா முன்னாள் முதல்வரும், பிஜூ ஜனதா தள முன்னாள் தலைவருமான மறைந்த பிஜூ பட்நாயக் பற்றி ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார். நிஷி காந்த் துபே வௌியிட்ட அறிக்கையில், “1960களில் சீனாவுடனான போரின்போது, அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ மற்றும் அப்போதைய பிரதமர் நேருவுக்கும் இடையே பிஜூ பட்நாயக் பாலமாக செயல்பட்டார்” என குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் ஒடிசா முன்னாள் முதல்வரும், பிஜூ பட்நாயக்கின் மகனும், பிஜூ ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக், துபேயின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நவீன் பட்நாயக் கூறுகையில், “பிஜூ பட்நாயக் பற்றி துபே சொன்ன கருத்துகளை கண்டு நான் அதிர்ச்சி அடைகிறேன். சீன போரின்போது நான் 13 வயது சிறுவனாக இருந்தேன். அந்த போரை தடுக்க பிஜூ பட்நாயக் எவ்வளவு முயற்சிகள் செய்தார் என்பது எனக்கு தெரியும். இப்படிப்பட்ட அவதூறு கருத்துகளை வௌியிட்ட நஷி காந்த் துபே மனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்” என்றார்.

Tags : Biju Patnaik ,BJP ,Nishi Kant Dubey ,Naveen Patnaik ,Bhubaneswar ,Odisha ,Chief Minister ,Biju ,Janata Dal ,China… ,
× RELATED மம்தா பானர்ஜி வாக்காளர்களை மிரட்டுகிறார்: தேர்தல் ஆணையத்தில் பாஜ புகார்