- மத்திய அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- புது தில்லி
- லோக்
- சபா
- காங்கிரஸ்
- கட்சிரோலி-ஷிமூர்
- நாம்டியோ தசாரம் கிர்சன்…
புதுடெல்லி: வாடிக்கையாளர்கள் லாக்கர்களில் வைக்கும் பொருள்களை வங்கிகள் பார்க்கவோ, பதிவு செய்யவோ முடியாது என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சிரோலி-சிமூர் தொகுதி எம்பியுமான நம்டியோ தசாராம் கிர்சன், வங்கி லாக்கர்களில் வைக்கப்படும் பொருள்களுக்கு காப்பீடு வழங்குவது பற்றி கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு பதிலகித்து பசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “வாடிக்கையாளர்கள் லாக்கர்களில் என்ன விலை உயர்ந்த பொருள்களை வைக்கிறார்கள், எவ்வளவு பணத்தை வைக்கிறார்கள் என்பதை வங்கிகள் பார்க்கவோ அல்லது பதிவு செய்யவோ முடியாது. வங்கி வாடிக்கயைாளர்களின் தனியுரிமை காரணமாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. எனவே வாடிக்கயைாளர்களுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு லாக்கர் ஆண்டு வாடகையை விட 100 மடங்கு வரை மட்டுமே இழப்பீடு தரப்படும். லாக்கர் கவரேஜ் விதிகளில் தற்போதைக்கு எந்தவித மாற்றமும் இல்லை. வங்கிகள் லாக்கர் உள்ளடக்கங்களை ஆய்வு செய்ய முடியாத காரணத்தால், இந்த சீரான இழப்பீட்டு முறை நடைமுறையில் உள்ளது” என விளக்கம் அளித்தார்.
