×

மேற்கு ஆசியா போரில் 8 இந்தியர்கள் உயிரிழப்பு: வெளியுறவு அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: மேற்கு ஆசியா போரில் பல்வேறு சம்பவங்களில் 8 இந்தியர்கள் உயிரிழந்து விட்டதாகவும் ஒருவர் காணவில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியா நிலவரம் குறித்து டெல்லியில் நேற்று நடந்த அமைச்சகங்களுக்கு இடையிலான விளக்கக் கூட்டத்தில் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அசீம் ஆர்.மகாஜன், ‘‘குவைத்தில் நேற்று நடந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். குவைத்தில் உள்ள நமது தூதரகம், உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளது. மேலும், அனைத்து உதவிகளை வழங்கவும், அவரது உடலை விரைவாக இந்தியாவுக்கு கொண்டு வரவும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். இதுவரை இப்போரில் பல்வேறு சம்பவங்களில் துரதிஷ்டவசமாக 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவரை காணவில்லை. ’’ என்றார்.

Tags : Indians ,West Asia ,conflict ,Ministry of External Affairs ,New Delhi ,West ,Asia ,Delhi ,External Affairs Ministry… ,
× RELATED மம்தா பானர்ஜி வாக்காளர்களை மிரட்டுகிறார்: தேர்தல் ஆணையத்தில் பாஜ புகார்