×

புறவழிச்சாலை பணிகளை வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செங்கம் பகுதியில் நடந்து வரும்

செங்கம், மார்ச் 31: செங்கம் பகுதியில் நடந்து வரும் புறவழிச்சாலையில் பணிகளை வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார். செங்கம் ‌உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் செங்கம் புறவழிச்சாலையில் சாலை பணிகள் மற்றும் சிறு பாலங்களின் பணிகள் நடந்து வருகிறது. மேலும், புதுச்சேரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு சாலை முதல் போளூர்- செங்கம் வரை உள்ள சாலையை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 21 சிறுபாலங்கள் மற்றும் செய்யாற்றின் குறுக்கே நடைபெறும் பாலப்பணிகளை திருவண்ணாமலை வட்ட கண்காணிப்பு பொறியாளர் கே.முரளி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடைபெற்று வரும் பணிகளை விரைந்து மற்றும் தரமாக அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது திருவண்ணாமலை கோட்ட பொறியாளர் பி. ஞானவேல், செங்கம் உதவி கோட்ட பொறியாளர் து.மனோகரன், உதவி பொறியாளர் பிரீத்தி மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags : Circle Supervising Engineer ,Chengam ,Chengam Sub-District Highways Department ,Puducherry ,
× RELATED நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி...