×

பயிற்சி ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு கலசபாக்கம் தொகுதியில்

கலசபாக்கம், மார்ச் 28: தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடக்கிறது. அதற்கான அறிவிப்பு கடந்த 15ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது. வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வு 100% ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சட்டமன்றத் தேர்தலில் பணியில் ஈடுபடும் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. அதன்படி கலசபாக்கம் அருகே தென் பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 14 அறைகளிலும் அதேபோல் ஜவ்வாது மலையில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இதில் கலசபாக்கத்தில் 312 வாக்குச்சாவடி அலுவலர்களும் ஜவ்வாது மலையில் 200 வாக்குச்சாவடி அலுவலர்களும் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்படும் தேர்தல் பயிற்சி வகுப்பு குறித்து தென் பள்ளிப்பட்டு அருகே உள்ள தனியார் கல்லூரியில் கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இன்று நடைபெறும் பயிற்சியில் முறையாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்குமாறு ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில் குமரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் துரைராஜ் மற்றும் பலர் உடன் இருந்தன.

Tags : Kalasapakkam ,Tamil Nadu Assembly general elections ,Election Commission ,
× RELATED 82,000 பேருக்கு வீடு தேடி வரும் ரேஷன்...