ஆரணி, மார்ச் 28: ஆரணி அடுத்த சென்னாத்தூர் லாடவரம் கிராமத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்து வருவதாக, தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், எஸ்ஐ ஆனந்தன், மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அந்த கிராமத்தில் உள்ள மாதாகோயில் அருகில் சந்தேகப்படும் படி, நின்றிருந்த ஒரு பெண்ணை விசாரித்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அதே கிராமத்தை சேர்ந்த சூர்யா, இவரது மனைவி கோட்டீஸ்வரி(26), என்பதும், மதுபாட்டிகள் பதுக்கி விற்று வந்ததும் தெரியவந்தது.
உடனே, போலீசார் அவர்களிடம் இருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், ஆரணி அடுத்த கீழ்நகர் கிராமத்தில் கண்ணமங்கலம் போலீஸ் எஸ்ஐ சங்கர் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது, கீழ்நகர் ஆற்றுப்பாலம் அருகில் சந்தேகப்படும் படி நின்றிருந்தவரை அழைத்து விசாரித்ததில், கீழ்நகர் நடுத்தெருவை சேர்ந்த பிரபாகரன்(42), இவர், மதுபாட்டில்களை பதுக்கி விற்று வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடமிருந்த 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துனர். மேலும், மதுபாட்டில்களை விற்ற கோட்டீஸ்வரி, பிரபாகரன் ஆகிய இருவரையும் ஆரணி தாலுகா மற்றும் கண்ணமங்கலம் போலீசார் கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
