அரவக்குறிச்சி மார்ச் 28: அரவக்குறிச்சி தவிடுப்பாளையம் செக்போஸ்டில் ரூ.53,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தவிடுப்பாளையம் செக்போஸ்ட்ட்டில் நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது மேட்டுப்பாளையம் முதல் சாலைப்புதூர் அருகே கந்தசாமிபாளையம் நோக்கிச் சென்ற வாகனத்தில் வந்த வாகனத் தை மடக்கிப்பிடித்து சோதனை நடத்தினர்.
அதில் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த இளங்கோவன், உரிய ஆவணங்களின்றி ரூ.53,000 வைத்திருந்தது கண்டறியப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அந்த பணத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து, அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட ரூ. 53,000 தொகை, மறு உத்தரவு வரும் வரை அரவக்குறிச்சி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
