×

கிருஷ்ணராயபுரம் அருகே ரூ.20 லட்சத்தில் சமுதாய கூடம்

கிருஷ்ணராயபுரம், மார்ச் 28: கிருஷ்ணராயபுரம் அருகே சித்தலவாய் ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பில் திராவிட மாடல் அரசு புதியதாக சமுதாயக்கூடம் கட்டிக் கொடுத்ததற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சித்தலவாய் ஊராட்சியில் கீழ முனையனூரில் சமுதாயக்கூடம் வேண்டும் என பொதுமக்கள் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.

அதனை திராவிட மடல் அரசு மூலம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதியதாக சமுதாயக்கூடம் கட்டும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடம் கட்டிடத்தை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்தார். இதன் மூலம் கீழமுனையனூர் பகுதி பொதுமக்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜிக்கும், எம்எல்ஏ சிவகாமசுந்தரிக்கும், மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரவி ராஜாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

 

 

Tags : Krishnarayapuram ,Dravidian model government ,Chittalawai panchayat ,Keezhamanayanur ,Chittalawai ,Karur ,
× RELATED 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி கலெக்டர் தகவல்