×

நிலாவை கட்டி இழுக்கும் சிறுவன், சிறுமி கோவை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவு

 

கோவை, மார்ச் 24: கோவையில் நேற்று நடந்த வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவானது.
கோவை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து 2026-27ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று கோவை வழக்கறிஞர் சங்க அரங்கில் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு வழக்கறிஞர்கள் பாலகிருஷ்ணன், ரவீந்திரன், துணைத் தலைவர்கள் பதவிக்கு அய்யப்பன், பிரபு சங்கர், திருஞானசம்பந்தம் ஆகியோர் போட்டியிட்டனர். செயலாளர் பதவிக்கு ஆனந்தீஸ்வரன், சிவசாமி தமிழன், சுதீஷ், விஜயராகவன் ஆகியோரும் போட்டியிட்டனர். 3,647 பேரில் 2,626 பேர் தங்களது ஓட்டை செலுத்தினர். 72% வாக்குகள் பதிவானது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. புதிய நிர்வாகிகள் ஏப்ரல் 1-ம் தேதி பொறுப்பேற்க உள்ளனர்.

Tags : Coimbatore Bar Association ,Coimbatore ,Bar Association ,
× RELATED கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.64...