×

நீர் நிறைந்த வாளிக்குள் மூழ்கி பெண் குழந்தை பலி

 

கோவை,மார்ச்24: பீகாரை சேர்ந்தவர் தினேஷ் (28). அவர் குடும்பத்துடன் ராம் நகர் பட்டேல் ரோட்டில் தங்கிருந்து வெல்டிங் ஒரக்‌ஷாப்பில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரிட்டு குமாரி (25). இவர்களுக்கு 8 மற்றும் 5 வயதில் மகன்களும், ஒரு வயதில் ராதிகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். அதில் 8 வயது குழந்தை பீகாரிலும், 5வயது மகன் மற்றும் ராதிகா இவர்களுடன் இருந்து வந்தனர்.
நேற்று முன்தினம் ரிட்டு குமாரி வீட்டிற்குள் வாளியில் தண்ணீர் பிடித்து வைத்திருந்தார். அதன் அருகே ராதிகா விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது கண் இமைக்கும் நேரத்தில் ராதிகா தலைகுப்புற தண்ணீருக்குள் விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தினேஷ் மற்றும் ரிட்டு குமாரி குழந்தை ராதிகாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ராதிகா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Coimbatore ,Dinesh ,Bihar ,Ram Nagar Patel Road ,Ritu Kumari ,
× RELATED கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.64...