×

ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை கருத்தரங்கம்

 

கோவை, மார்ச் 24: கோவை ஜி.கே.என்.எம்.மருத்துவமனையில் ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை சார்பில் ரோஸ்கான் 2026 என்ற ரோபோடிக் ஆன்கோசர்ஜரி கான்பரன்ஸ் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. கடந்த 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்ற இந்த கருத்தரங்கில், அறிவு பரிமாற்றம், திறன் மேம்பாடு மற்றும் அதி நவீன புற்றுநோய் சிகிச்சையின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இதனை அம்மருத்துமனையின் முதன்மை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி தொடங்கி வைத்தார். ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் ஜிசிசி அண்டு இந்த்யா மருத்துவ ஆலோசனைக் குழு தலைவர் சோமசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ்நாடு அறுவை சிகிச்சை புற்றுநோயியல் சங்கத்தின் தலைவர் சுப்பையா சண்முகம், ஜி.கே என்.எம் மருத்துவமனையின் முன்னணி புற்றுநோயியல் நிபுனர்களான சிவநேசன், அருள் ராஜ், பிரவீன் ரவிசங்கரன், மோகன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில் நேரடி அறுவை சிகிச்சை பயிற்சிகள், ரோபோடிக் தளங்களில் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

Tags : GKNM Hospital ,Robotic Oncosurgery Conference ,Coimbatore ,ROSCON 2026 ,Robotic Oncosurgery Department ,
× RELATED கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.64...