- கோயம்புத்தூர்
- டாக்டர்
- ராய் ஜான் கொரூலா
- என்.எஸ்.ஆர் சாலை
- சாய்பாபா காலனி, கோயம்புத்தூர்
- கோவை நுகர்வோர் நீதிமன்றம்
கோவை, மார்ச் 23: கோவை சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர் ரோடு பகுதியை சேர்ந்தவர் டாக்டர் ராய் ஜான் கொருலா. இவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
நான் வேலும் சி.எம்.சி. மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தனியார் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு பெற்றிருந்தேன். இதற்கிடையே உடல் நலக்குறைவால் எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். மருத்துவ செலவாக ரூ. 5 லட்சம் ஆனது. ஆனால் இந்த தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி தங்கவேலு, உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் ரூ. 5 லட்சத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு தொகையாக டாக்டருக்கு வழங்க வேண்டும் என்றும், மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் கோர்ட் செலவாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
