×

தேர்தல் விதிமுறைகளை மீறி ரூ.10 ஆயிரம் தருவதாக வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கி அதிமுக பிரசாரம்: அதிகாரிகளிடம் திமுக புகார்

 

மாதவரம்: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்தமாதம் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக, அதிமுக மற்றும் பல்வேறு கட்சியினர் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு கேட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் மூர்த்தி, அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் நேற்று மாதவரம் பகுதிகளில் வீடு,வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து ரூ.10 ஆயிரம் மற்றும் மகளிர் உரிமைத்தொகை 2 ஆயிரம் வழங்குகிறோம் என கூறி பூத் சிலிப், விண்ணப்பம் படிவத்தை கொடுத்து பூர்த்தி செய்து கையெழுத்து பெறுவதாக திமுகவினர் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக அதிமுகவினர் வீடு, வீடாக சென்று உதவி தொகை வழங்குவது தொடர்பான விண்ணப்பம் விநியோகிப்பதாகவும் பொதுமக்களை ஏமாற்றும் வகையில் செய்துவரும் இந்த செயலை தடுக்கவேண்டும் என்று சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, மாதவரம் தாசில்தார் அருள்ஜோதி, தேர்தல் பறக்கும் படையினருக்கு செல்போன் மூலம் புகார் கொடுத்தார். இதையடுத்து அதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Dhimuka ,Madhavaram ,Tamil Nadu Assembly elections ,Dimuka ,Adimuka ,
× RELATED உங்க கட்சிகாரங்க மற்ற பெண்களை பற்றி...