×

ஈரான் மீதான போரால் பிபா உலக கோப்பை அட்டவணையில் மாற்றமா?

நியூயார்க்: பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 23வது உலக கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜுன் 11ம் தேதி முதல் ஜூலை 19ம்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. மொத்தம் 48 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இதனிடையே ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மேற்கு ஆசியா பகுதியில் போர் பதற்றம் நீடிக்கிறது.

போர் காரணமாக ஈரான் பங்கேற்கும் போட்டிகள் அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவிற்கு மாற்ற பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில் போட்டி அட்டவணை மாற்றப்படலாம் என தகவல் வெளியானது. இதற்கு பதில் அளித்துள்ள பிபா தலைவர் கியானி, அசல் அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார். போட்டியிடும் 48 அணிகளும் விரைவில் உறுதி செய்யப்படும், மேலும் உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் எனவும் அவர் கூறினார்.

Tags : Iran ,FIFA World Cup ,New York ,FIFA World Cup football ,23rd World Cup football ,United States ,
× RELATED ரூ.16,000 கோடிக்கு விற்பனையை நிராகரித்த...