×

குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை

 

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரமாக பல்வேறு இடங்களில் இதமான சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 5.60 மி.மீ ஆகப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மாம்பழத்துறையாறு பகுதியில் 19.8 மி.மீ மழையும், அதற்கு அடுத்தபடியாக பெருஞ்சாணி பகுதியில் 19 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை: 17.2, புத்தன் அணை: 14.6. முக்கடல் அணை: 14.3, ஆனைக்கிடங்கு: 13.6, சுருளோடு: 13.4, நாகர்கோவில்: 4 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.

தொடர் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து காணப்படுகிறது. 48 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பேச்சிப்பாறை அணை தற்போது 20.39 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 100 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 77 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 12.4 அடியாக உள்ளது. இதிலிருந்து வினாடிக்கு 25 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்துள்ளது.

Tags : Kumari district ,Nagercoil ,Kanyakumari district ,Mambazhathuraiyaru ,
× RELATED கமல்ஹாசன் தலைமையில் மாவட்டச்...