×

சரக்கு அடிப்பதை கைவிட்டு 6 மாசம் ஆச்சு!: யுஸ்வேந்திர சாஹல் பேட்டி

 

மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக மீண்டும் களமிறங்கும் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் தனது உடல் தகுதியை மேம்படுத்தும் நோக்கில் மது அருந்துவதை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏபி டிவில்லியர்ஸின் யூடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சஹால், ‘‘நான் மது அருந்துவதை நிறுத்தி 6 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. எனக்கு இப்போது 35 வயதாகிறது. நான் அதிக சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும், எனது அணிக்காக 150 சதவீதம் பங்களிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

ஒரு மூத்த வீரராக, ஐபிஎல்-லில் உள்ளவர்கள் என்னிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’’ என்றார். மேலும் கடந்த ஆண்டு பைனலில் மார்கோ ஜான்சன் இல்லாதது எங்களுக்கு பெரிய இழப்பு. அவர் இருந்திருந்தால், நாங்கள் நிச்சயமாக சாம்பியன் பட்டத்தை வென்றிருப்போம். கடந்த சீசனில் பிளே ஆப்பிற்கு முன் எனது விரலில் எலும்பு முறிந்தது. இதனால் குவாலிபயர் மற்றும் இறுதிப் போட்டியில் சரியாக லெக்-ஸ்பின் பந்துவீச முடியவில்லை. இந்த முறை நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறேன், என்றார்.

Tags : Yuzvendra Chahal ,Mumbai ,Punjab Kings ,IPL 2026 ,AB de Villiers' ,YouTube ,Chahal ,
× RELATED ஈரான் மீதான போரால் பிபா உலக கோப்பை அட்டவணையில் மாற்றமா?