புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்,சமூக நீதியின் மாபெரும் வீரரும், பகுஜன் உணர்வின் வழிகாட்டும் ஒளியுமான மதிப்பிற்குரிய கன்ஷி ராமுக்கு அரசு பாரத ரத்னா விருது வழங்கி அரசு கவுரவிக்க வேண்டும்/. இந்த மிக உயர்ந்த தேசிய விருது, லட்சக்கணக்கான பிற்படுத்தப்பட்ட தலித் மக்களின் உரிமைகள், சுயமரியாதைக்கான பாதையைக் காட்டிய கன்ஷி ராமுக்கும் அந்த இயக்கத்திற்கும் ஒரு அஞ்சலியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
