×

ஐபிஎல் தொடரில் கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆடுவதில் சிக்கல்

பெங்களூரு: 19வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோத உள்ளது. ஆஸ்திரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் ஆர்சிபி அணியில் இடம் பெற்றுள்ள நிலையில் அவர் இன்னும் உடற்தகுதியை எட்டவில்லை. ஏற்கனவே காயத்தால் டி.20உலக கோப்பையை தவறவிட்ட அவர் ஐபிஎல்லில் ஆடுவது சந்தேகம் தான். கடந்த 3-4 சீசனில் அவர் ஐபிஎல்லில்முக்கிய பவுலராக விளங்கினார். 27 போட்டியில் 45 விக்கெட் எடுத்துள்ளார்.

இதேபோல் சன்ரைசர்ஸ் கேப்டன் பாட் கம்மின்சும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். டி20உலக கோப்பையில் அவர் பங்கேற்காத நிலையில் ஐபிஎல்லில் தொடக்க போட்டிகளில் ஆடமாட்டார் என தெரிகிறது. இந்திய வீரர்கள் வரும் 16ம் தேதி ஐபிஎல் அணிகளின் பயிற்சி முகாம்களில் இணைய உள்ளனர். ஆனால் ஈரான் போர் காரணமாக மேற்கு ஆசியா முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்தென்ஆப்ரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் வருவதில் சிக்கல் உள்ளது.

Tags : Cummins ,Hazlewood ,IPL ,Bengaluru ,RCB ,Sunrisers Hyderabad ,
× RELATED பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா F1 Grands Prix...