×

பரிசுப்பொருட்களை லிஸ்ட் போட்டு ஓட்டு கேட்கும் வேட்பாளர்கள்

 

தமிழகத்தையொட்டி புதுவை இருந்தாலும் இங்கு பிரசாரம், வாக்கு சேகரிப்பது என்பது முற்றிலும் மாறுப்பட்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 27 ஆயிரம் வாக்காளர்கள் தான் இருப்பார்கள். இதனால் எவ்வளவு பெரிய ஸ்டார் வேட்பாளர்களாக இருந்தாலும் வீடு தேடி, அதாவது மூன்று மாடியில் குடியிருந்தாலும் சென்று வாக்கு கேட்க வேண்டும் என்று வாக்காளர்கள் எதிர்பார்ப்பார்கள்.

தற்போது வரை திமுக, காங்கிரஸ் கூட்டணியும், என்.ஆர்.காங்கிரஸ், பாஜ கூட்டணி தான் முதன்மையான கூட்டணியாக உள்ளது. தமிழ்நாட்டில் வாக்கு சதவீதத்தை நிரூபித்த சீமான் கட்சி, புதுவையில் ஒரு சதவீதத்துக்கு கீழ் தான் உள்ளது. இதே நிலை தான் நடிகர் விஜய் கட்சியான தவெகவுக்கும் உள்ளது. பிரதான கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-திமுக, என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ ஆகியவை கூட்டணி உறுதியானாலும் தொகுதி பங்கீடு குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை.

விரைவில் தேர்தல் தேதி அறிவிக்க உள்ள நிலையில் இந்த கட்சிகளின் ஸ்டார் வேட்பாளர்கள், தங்களது தொகுதியில் வாட்டர் பில்டர், குக்கர், ஹாட் பாக்ஸ், வீட்டுக்கு தேவையான பொருட்கள், மளிகை பொருட்களை கொடுத்து தங்களது கட்சி சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். ஒரு சிலர் 2026 முதல் 2031ம் வரை ஐந்து ஆண்டுக்கு தீபாவளி, பொங்கல் மற்றும் பிரதான மாதங்களில் என்னென்ன பொருட்கள், வழங்கப்படும் என்பதை ரேஷன் கார்டு போன்று பட்டியலிட்டு வீடு வீடாக சென்று கொடுத்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

Tags : Tamil Nadu ,
× RELATED பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத...