×

எடப்பாடி சாதித்தாரா இல்லையா என்பது தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தெரிந்துவிடும் : புதிய கட்சியை அறிவித்த பின் சசிகலா பேட்டி

சென்னை : “அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என்ற புதிய கட்சியின் பெயரை வி.கே. சசிகலா அறிவித்தார்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடும் நோக்கில் புதிய கட்சி தொடங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தார். ஏற்கனவே கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது கட்சி பெயரை அறிவித்தார் சசிகலா. இந்நிலையில் தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா,”அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற அதிமுக தொண்டர் ஒருவர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து தொடங்கிய கட்சியில் இணைந்துள்ளேன்.

தொண்டர் ஒருவர் தொடங்கிய அதிமுகவில் எம்ஜிஆர் இணைந்ததை போல நானும் முடிவு எடுத்தேன்.அக்கட்சி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும். தனிமரம் தோப்பாகாது; நாங்கள் தனிமரமாக வரவில்லை தோப்பாக வந்துள்ளோம். நாங்கள் மக்களோடு இருக்கிறோம் என்பதற்கு எங்களுக்கு கிடைத்துள்ள தென்னந்தோப்பு சின்னமே சான்று. சசிகலா தலைமையிலான அஇபுதமமுக சட்டப்பேரவை தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட உள்ளேன். ஒத்தக் கருத்துடன் உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம். எடப்பாடி பழனிசாமி சாதித்தாரா இல்லையா என்பது தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தெரிந்துவிடும்,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Edapadi ,Sasikala ,Chennai ,All India Revolutionary Leader People's Progress Corporation ,V. K. Sasikala ,Chief Minister ,Jayalalithaa ,
× RELATED எடப்பாடி பழனிசாமி சொல்வதெல்லாம் பொய்,...