×

அதிமுக சார்பில் சென்னையில் 15ம் தேதி எடப்பாடி இப்தார் விருந்து

சென்னை: அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுதினம் (ஞாயிறு) மாலை 5.30 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள ஓட்டல் இம்பிரீயல் காம்ப்ளக்சில் இப்தார் விருந்து வழங்க உள்ளார். நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமுதாய மக்கள், தோழமை கட்சிகளின் தலைவர்கள், அதிமுகவில் மாநில, மாவட்ட அளவில் பணியாற்றி வரும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Edappadi ,Iftar ,Chennai ,Adimuka ,Adimuka Chief Corporation ,Iftar Lent Opening Ceremony ,Supreme ,Secretary General ,Edappadi Palanisami ,
× RELATED சொன்னாரு..! செஞ்சாரு..!! அரசுப்பள்ளி...